• Breaking News

    2022ம் ஆண்டுக்கான உயர்கல்வி மற்றும் துறைசார் வழிகாட்டல் கல்விக்கண்காட்சி யாழில்!

     


    2022ம் ஆண்டுக்கான உயர்கல்வி மற்றும் துறைசார் வழிகாட்டல் கல்விக்கண்காட்சி இன்று யாழ் தனியார் விடுதியில் இடம்பெற்றது.


    குறித்த கண்காட்சியின் நோக்கமாக கல்வி பொதுத்தாராதர உயர்தரத்தில் கல்வி கற்றவர்களுக்கான தொழில் முயற்சிக்கான வழிகாட்டல் ஆகும்.

    இதில் தென் இலங்கையினை சேர்ந்த 36 கல்வித்துறைசார்ந்த  தனியார் நிறுவனங்களும் 15 அரச திணைக்களத்துடன் இணைந்த அலுவலகமும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி துறைசார்ந்தவர்களினால் கண்காட்சிக்கான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

    இவ் நிகழ்வில் வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் யாழ் மத்திய கல்லூரி அதிபர் எ.எழில்வேந்தன்,மற்றும் அரச,தனியார் துறைசார்ந்த கல்விக்கான துறைசார்ந்த நிபுணர்கள் பிரதித்துவ அலுவலர்கள் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    இக்கற்கைநெறியில் NVQ  டிப்ளோமா சான்றிதழ் 1,2,3,4 உள்ளாடங்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது.

    இக் கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad