• Breaking News

    கூட்டு பாலியல் வன்கொடுமை - பள்ளிச் சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது !



    விருதுநகரில் இளம்பெண் ஒருவரை பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும், விருதுநகர் மேலத்தெருவில் மெடிக்கல் கடை நடத்திவரும் ஹரிஹரன் என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹரிஹரன் அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, அதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் மொபைலில் வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும், அவர் அந்த வீடியோவை தன் நண்பர்கள் மாடசாமி (37), பிரவீன்(22), ஜீனத் அகமது(27) ஆகியோரிடம் காட்டியிருக்கிறார். அதைப்பார்த்த நண்பர்கள் மூவரும், இளம்பெண்ணுடன் தாங்களும் தனிமையில் இருக்க வேண்டுமெனக் கூறியிருக்கின்றனர். அதற்கு ஹரிஹரனும் சம்மதம் தெரிவித்து தன்னிடமிருந்த வீடியோவை நண்பர்கள் மூன்று பேருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

    இந்த வீடியோவை வைத்துக்கொண்டு இளம்பெண்ணைத் தொடர்பு கொண்ட மற்ற மூவரும், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், அந்த வீடியோ அதேபகுதியைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பள்ளி மாணவர்கள் நான்கு பேரும் தனித்தனியே, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஹரிஹரன் உட்பட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து அந்த இளம்பெண் இன்று விருதுநகர் பாண்டிய நகரில் உள்ள ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜீனத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad