கைவிடப்பட்ட வீட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு - மரணத்தில் சந்தேகம்!
நான்கு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அயலவர்கள் நேற்று (08) மாலை 119 என்ற இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பேரில் கிரிபத்கொட பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் ஒருவராவார், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் பொலிஸாரால் தெரிவித்தனர்.
பெண் உயிரிழந்த வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக ஆண் ஒருவர் வருகை தந்துள்ளதாகவும், சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை