• Breaking News

    எரிபொருளை பெற்றுக்கொள்ள மாட்டு வண்டியில் சென்ற பிரதேச சபை உறுப்பினர்!

     


    எரிபொருளை பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சென்றுள்ளார்.

    குறித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று இடம்பெறும் நிலையில் தனது வாகனத்திற்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மாட்டுவண்டியில் பயணித்ததாக அவர் கூடியிருந்த மக்களிடம் கூறியுள்ளார்.

    இன்றைய தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad