நடுவீதியில் வைத்து கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட பாடசாலை மாணவி!
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவி கொலைசெய்யப்பட்டமைக்கு காதல் விவகாரமே காரணம் என ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று (09) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நேற்று, பதுளை − ஹாலிஎல − உடுவர தோட்டம் பகுதியிலுள்ள 18 வயதான குறித்த மாணவி, பாடசாலை சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, 33 வயது நபர் ஒருவரினால் நடுவீதியில் வைத்து கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியை கோடரியால் தாக்கி கொலை செய்தவர் அதிரடியாக கைது!
கருத்துகள் இல்லை