• Breaking News

    மூன்றாம் உலகப்போர் - அமெரிக்க அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

     


    நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதலே மூன்றாம் உலகப் போர். கிரம்ளின் மூன்றாம் உலக போரை தூண்டுகிறது.அதை தடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். உக்ரைனில் ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு வோஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

    ஐரோப்பாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்போம். முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம், நேட்டோவை பலப்படுத்துவோம்.

    உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் போரிட மாட்டோம். இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக ரஷ்யா கடுமையான விலை கொடுக்க நேரிடும்.

    அவர் (விளாடிமிர் புடின்) சண்டையின்றி உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று நம்பினார், அவர் தோல்வியுற்றார். உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்க மக்களும் உலகமும் ஒன்றுபட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad