நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா
நாட்டில் மீண்டும் கொரோனா அலைகள் தலைதூக்குவதைத் தடுப்பதற்காக எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கான சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் பெறாத அனைவரும் அடுத்த சில நாட்களுக்குள் அதனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை