அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் நயினாதீவு சுகாதாரப்பிரிவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகவிகாரைக்கு சிறப்பு வழிபாட்டு ஒன்றுக்கு சென்ற போது நயினாதீவு பகுதியில் உள்ள சுகாதாரப்பிரிவினர்கள் அடங்கிய குழுவினர்கள் விசேட அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்தபோதே கடற்றொழில் அமைச்சருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழில் அமைச்சர் தற்போது சுயதனிமைப்படுத்தலில் இருப்பது அவருடன் சென்ற குழுவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர் யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகவிகாரையின் விஜயத்தின்போது அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை