எரிபொருட்களின் விலை குறையும் சாத்தியம்?
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வருடங்களின் பின்னர் சீனாவின் ஷாங்காய் நகரம் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்றைய தினம் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.92 டொலராகவும், டபிள்யூ டி ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.38 டொலராகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் எரிபொருள் விலைகள் கணிசமாக குறைவடையக்கூடும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலை வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் இரு சந்தைகளுக்கும் ஏற்பட்ட நட்டம் 7 சதவீதத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்த எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி இன்னும் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று காலையும் நேற்றிரவும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு நிலையங்களில் நுகர்வோர் வரிசையில் காத்திருப்பதை காணமுடிந்ததாக அததெரண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை