ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நடாத்துமாறு யாழ். அரச அதிபரிடம் பிரதமரின் பிரதிநிதி கீதநாத் கோரிக்கை!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை விரைந்து நடத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதி கீதநாத் காசிலிங்கம் கடிதம் மூலம் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி பிரதமரின் பிரதிநிதியாக காசிலிங்கம் கீதநாத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெறாத யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை அவசரமாக கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களையும் கூட்டங்களையும் விரைந்து செயல்படுத்துமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை