முல்லைத்தீவில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு - இரட்டைவாய்கால் மற்றும் புதுமாத்தளன் பகுதிகளிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இரட்டைவாய்கால் பகுதியிலிருந்து ஒரு தொகுதி T56 ரக துப்பாக்கி ரவைகளும், 60 மில்லிமீற்றர் வெடிகுண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுமாத்தளன் பகுதியிலிருந்து, ஆர்பிஜி வெடிகுண்டு ஒன்றும், 81மில்லி மீற்றர் மோட்டார் குண்டு ஒன்றும், விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படும் அடையாளம் தெரியாத வெடிகுண்டு ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை