இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை
பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
குறித்த உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது,
அ) 2021 திசெம்பரில் பன்னா
ட்டு நாணய நிதிய அலுவலர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுதல், இவ்விஜயத்தின் போது நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதேபோன்று பல்வேறு அரசாங்க முகவராண்மைகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அத்துடன் தனிப்பட்டவர்களுடன் ஆலோசனைகள் இடம்பெற்றன,
ஆ) அலுவலர் குழு பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமையகத்திற்குத் திரும்பியதுடன் மேலதிகத் தெளிவுபடுத்தல்கள் குழுவினால் கோரப்பட்டது,
இ) உறுப்புரை IV அறிக்கை மீதான பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது, அக்காலகட்டத்தில் இலங்கை அதிகாரிகள் அறிக்கையினை வெளியிடுவதற்கு கொள்கையளவில் சம்மதம் தெரிவித்திருந்தனர்,
ஈ) நிறைவேற்றுச் சபை கலந்துரையாடல் நிறைவுபெற்றதன் மீது பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டது,
உ) உறுப்புரை IV ஆலோசனையில் கண்டறியப்பட்டவை மீது அதிமேதகு சனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்தது,
ஊ) இலங்கை அதிகாரிகளால் இறுதி இசைவு வழங்கப்பட்டது, அத்துடன்
எ) 2022 மாச்சு 25 அன்று இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது.
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியானது அரசாங்கத்திற்கு கொள்கைக் கருமங்கள் மீது மேலும் விரிவான பகுப்பாய்வுகளை வழங்குவதற்கு மேலதிகமாக, அதன் பகுப்பாய்வுகளைத் தொடர்ந்தும் வெளியிட்டதுடன் அதுபற்றி அரசாங்கத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றது.
அதேவேளை, நிதி அமைச்சினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் பல்வேறு கொள்கைச் சீராக்கங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 2021 ஓகத்திலிருந்து நாணயக் கொள்கையினை இறுக்கமடையச்செய்தல், செலாவணி வீத நெகிழ்வுத்தன்மையினை அனுமதித்தல், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை கொடுக்கல்வாங்கல்கள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுதல், எதிர்பார்க்கப்பட்ட வருமானம் அதிகரித்தல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல், முக்கிய பண்டங்களுக்கு சந்தை அடிப்படையிலமைந்த விலைச் சீராக்கங்களை அனுமதித்தல் ஆகியவற்றை இவை உள்ளடக்குகின்றன.
பன்னாட்டு நாணய நிதியத்துடன் நெருக்கமான ஈடுபாட்டினை இலங்கை அரசாங்கம் நாடுகின்றது என்பதனை அது எடுத்துக்காட்டுவதற்கிணங்க, அத்தகைய ஈடுபாட்டில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தயாராகவுள்ளது.
கருத்துகள் இல்லை