பௌத்த மதகுருவுக்கு முன்னுரிமை கொடுத்த சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்!
சண்டிலிப்பாய் கலாச்சார மத்திய நிலையத்தின் திறப்புவிழாவானது இன்றையதினம் நடைபெற்றது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு அனைத்துமத மதகுருமார்களும் வருகைதந்திருந்தனர்.
இதன்போது மங்கள விளக்கேற்றல் மற்றும் ஆசியுரை வழங்கல் என்பன முதலில் பௌத்த மதகுருவால் நிகழ்த்தப்பட்டது.
தமிழர்களைக் கொண்ட பிரதேசமாக விளங்குகின்ற குறித்த பிரதேசத்தில், பிரதேச செயலகத்தின் இவ்வாறான நிகழ்ச்சி நிரலானது வேதனையையும் விசயத்தையும் ஏற்படுத்துகின்றது என குறித்த நிகழ்விற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் மொழியும், தமிழர்களின் கலாச்சாரமும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் பிரதேச செயலகமும் அதற்கு வழிவகுத்து கொடுப்பது போன்று செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை