• Breaking News

    எரிவாயுவினை கொள்வனவு செய்ய முடியாமல் மக்கள் திரும்பிச் செல்வது வாடிக்கையாகி விட்டது யாழில்!

     


    நாடு முழுவதும் எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

    இதனால் மக்கள் அன்றாடம் எரிவாயு நிரப்பு நிலையங்களில் கூடுவதும், எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் வீடு செல்வதும்  வாடிக்கையாகன ஒரு நிகழ்வாகியுள்ளது.

    அந்தவகையில் இன்றைய தினம் யாழில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு, எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்கு சென்ற மக்கள் எரிவாயு தீர்ந்து போனமையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

    எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வந்த மக்கள் தெரிவிக்கையில்,

    நாங்கள் பலதடவைகள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக இங்கு வந்து திரும்பிச் சென்றுள்ளோம்.

    பல வேலைச் சுமைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் இங்கு வருகின்றோம். ஆனாலும் எங்களால் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிவதில்லை.

    டோக்கன் அடிப்படையிலேயே 100 பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கப்படுகின்றது. ஆகையால் எங்களால் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

    முச்சக்கர வண்டி போன்ற வேறு வாகனங்களை வாடகைக்கு பிடித்து அதிலேயே எரிவாயு கொள்வனவு செய்ய வனுகின்றோம். ஆனால் எரிவாயு கிடைப்பதில்லை. அத்துடன் வாடகை வாகனத்துக்கான வாடகைப்பணம் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளை வீடுகளில் தனியாக விட்டு வரவேண்டிய சூழ்நிலைகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளோம்.

    எனவே உரியவர்கள் எமது நிலையை கருத்தில் கொண்டு இதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad