• Breaking News

    சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது!

     


    15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

    ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும் 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளார்.

    அது தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

    முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமி தான் காதலித்த இளைஞனுடன் வீடொன்றில் வாழ்வதனை அறிந்து, கடந்த 07.03.2022 அன்று அங்கு சென்று சிறுமியை மீட்டதுடன், இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

    மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளின் பின்னர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் குறித்த இளைஞனை பொலிஸார் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

    யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி பொலிசாரால் அதிரடியாக கைது!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad