இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக வைத்தியகலாநிதி நடராஜா நியமனம்!
இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்றுநோயியல் வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நடராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர், புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை உடல் உள ரீதியாக ஆறுதல்ப்படுத்துவது, சிகிச்சை வழங்குவது போன்றவற்றில் தனக்கென தனித்துவமான அணுகுமுறையை கொண்டவர்.
அவரது நோயாளர் நலன் சார்ந்து கரிசனைக்காகவே பல நோயாளர்கள் அவரிடம் சிகிச்சை பெற வேண்டுமென வலிந்து நிற்பது உண்டு.
இவர் காரைநகர் மண்ணை பிறப்பிடமாக கொண்டு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில். கல்வி கற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைவதற்கு பல பரிமாணங்களில் முயற்சித்தவர் .
சட்டத் துறையிலும் தன் பட்டப் படிப்பை நிறைவு செய்து ஒர் சட்டவாளராகவும் தன்னை நிலை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவரும் பலி - புத்தூரில் உயிரிழப்பு!
கருத்துகள் இல்லை