யாழ். கிழவி தோட்டத்தில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்!
யாழ். கரவெட்டி - கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில் 10 பவுண் நகை பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (11) மதியம் இடம்பெற்றுள்ளது.
கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலால் திரும்பி வீடு வந்து பார்த்தபோது வீட்டின் ஓடு பிரித்து காணப்பட்டுள்ளது.
இதனால் பதற்றமடைந்த வீட்டுக்காரர்கள் வீட்டுக்குள் இருந்த நகைகள் வைத்த இடத்தில் பார்த்த போது 10 பவுண் நகைகள் காணாமல்போயுள்ளன.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை