• Breaking News

    யாழில் தொழில் அற்றவர்களின் வீதம் ஒப்பீட்டளவில் அதிகம் - அரச அதிபர் தெரிவிப்பு

     


    யாழ்ப்பாண மாவட்டத்தில்  தொழில் அற்றவர்களுடைய வீதமானது ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது சற்று அதிகமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

    மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், 2022ம் ஆண்டுக்கான மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

    யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள் அரசதுறை வேலைவாய்ப்பை நாடுவதன் காரணமாகவே யாழ். மாவட்டத்தில் தொழில் அற்றவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

    பாடசாலைகளில் தொழில் வழிகாட்டி செயல் முறைகளை நாம் ஒழுங்காகச் ஏற்படுத்திய போதிலும் அதனை மாணவர்கள் சரியாக பின்பற்றாமையே இதற்கு பிரதானமான காரணமாகும்.

    யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய நிலையில் 11 வேலை வழங்குநர்களை  இங்கு அழைத்திருக்கின்றோம். 175 வேலைவாய்ப்புகள்  வெற்றிடமாக காணப்படுகின்ற நிலையில் அந்த வேலை வாய்ப்புகளை இங்கு வேலை தேடி வந்து இருப்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

    நமது பெற்றோர்கள்  மாணவர்களிற்கு  கல்வியை போதிப்பது மட்டுமல்லாது உரிய  தொழில் வழிகாட்டி தொடர்பிலும் அக்கறையாக செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் 
    எமது மாவட்டத்தில் வேலையற்றோரின் எண்ணிக்கையை  குறைக்க முடியும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad