• Breaking News

    மனைவியை கட்டிவைத்து விட்டு கணவன் மனைவியின் கண்முன் தூக்கிட்டு தற்கொலை!

     


    மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலம்பிட்டி திகிலிவட்டை பிரதேசத்தைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பத்மநாதன் றோந்திரா என்பவர் தவறான முடிவெடித்து உயிரை மாய்த்துள்ளார்.

    இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அண்மையில் திருமணமான நிலையில் கணவன் மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

    சம்பவ தினத்தன்று வீட்டின் அறையினுள் தனது மனைவியை துணியினால் கட்டி வைத்து விட்டு, மனைவிக்கு முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

    ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற் நீதிவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு யாழில் குவிந்த மக்கள்!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad