• Breaking News

    யாழில் தங்கம் வாங்குவதற்கு காத்திருப்போருக்கு இடி விழுந்தது போன்ற தகவல்!

     


    யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது.

    ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்துடன், இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

    யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.

    இதேவேளை, 24 கரட் தூய தங்கம் நேற்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது.

    பொது மக்களின் வரி பணத்தில் சம்பளம் பெறும் நாங்கள் சேவையினை திறம்பட செயற்படுத்த வேண்டும் - யாழ். மாவட்ட அரச அதிபர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad