மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் இராணுவத்தினரால் கௌரவிப்பு
மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு கைதடி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பாடல்கள் மற்றும் உரைகள் இடம்பற்றதுடன் இராணுவத் தளபதியால் மதியநேர உணவு, காசோலை மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளான பெண்களை சமூகத்தில் முதன்மைப்படுத்தும் நோக்கில் கந்தசாமி கருணாகரனின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை