மகளிர் தினத்தை முன்னிட்டு கொக்குவிலில் மகளிருக்கான பொதுக்கூட்டம்
பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் ஏற்பாட்டில், மார்ச் 08 சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய பொதுக்கூட்டம் 'பெண்கள் முன்னுள்ள சவால்கள்' என்ற மையக் கருவில் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப.3.30 மணியளவில் யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் முன்னணிச் செயற்பாட்டாளர் வாஹினி கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் விசேட உரைகளை உளவியல் பட்டதாரியும் பரதநாட்டியக் கலைஞருமான ஷாயினி சோதிராசா அவர்களும், பசுமைச்சுவடுகள் அமைப்பின் செயற்பாட்டாளர் இ.ரஜிதா அவர்களும், சமூக செயற்பாட்டாளர் இரட்ணேஸ்வரி பால்ராஜ் அவர்களும், பெண் உரிமைச் செயற்பாட்டாளர் சிவா மாலதி அவர்களும், வல்லமை அமைப்பின் தலைமைச் செயற்பாட்டாளர் ரஜனி ராஜேஸ்வரி அவர்களும் ஆற்றினர். உரைகளைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கருத்துகள் இல்லை