• Breaking News

    யாழ். மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதருடன் கலந்துரையாடல்!

     


    யாழ். மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரனை  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

    யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை  நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதி அன்னராசா தலைமையிலான மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று யாழ் இந்திய துணைத் தூதரை யாழ்  இந்திய துணைத்தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

    குறித்த கலந்துரையாடலின் போது ஏற்கெனவே யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக இலங்கை எல்லைக்குள் அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும்  எழுவைதீவு அனலைதீவு நயினாதீவு நெடுந்தீவு ஆகிய தீவு பகுதிகளில் இந்திய  படகுகள் இலங்கை எல்லைக்குள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad