ஊர்காவற்றுறையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேற்கு வீதி, ஊர்க் காவல் துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் (08) கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
55 வயதான குறித்த சந்தேக நபர் 2000 மில்லிக்கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தவேளையே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை