உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா!
உக்ரைன் படைக்கு அமெரிக்கா "எப் ஐ எம்-92 ஏ" எனப்படும் 'ஸ்டின்ஜெர் மிசைல்' ஆயுதங்களை வழங்கி உதவியுள்ளது.
அதிக சக்திமிக்க இந்த ஆயுதங்கள் வான்படைகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டவையாகும்.
“எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ போர் ஆயுதங்கள் தோள்களில் சுமந்து சென்று, வான்வழி போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் ஆகும்.இவற்றை பயன்படுத்தி தரையில் இருந்துகொண்டே எளிதாக, வானில் தாழ்வாக பறக்கும் எதிரி விமானங்களை தாக்கலாம்.
15 கிலோ எடை கொண்ட இந்த ஆயுதத்தை தோளில் சுமந்து கொண்டு உபயோகப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனுள் இருக்கும் சென்சார், வானில் பறக்கும் விமானங்களை அதன் வெப்பத்தை கொண்டு அறிந்து , பின் துல்லியமாக குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவையாகும்.
ஒன்றரை மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆயுதம், ஒலியின் வேகத்தை விட 2 மடங்கு அதிக வேகமாக பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், சுமார் 8 கி.மீ தூரத்துக்கு பயணித்து தாக்கும் திறன் கொண்டது.
அதனை ஏவியவுடன், வீரர்கள் வேறு பகுதிக்கு உடனடியாக சென்று தாக்குதலை தொடரலாம். அமெரிக்கா வழங்கியுள்ள ஸ்டின்ஜெர் மிசைல் ஆயுதங்களை பயன்படுத்தி இதுவரை 280 ரஷ்ய இராணுவ தளபாட வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை