• Breaking News

    கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - யாழ். அரச அதிபர் தெரிவிப்பு


     வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி யுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

    வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா  எதிர்வரும் மார்ச் 11,12ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

    எனினும் தற்போது நாட்டில் உள்ள கொரோனா இடர்நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் பெரு விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குறித்த பெருவிழாசிறப்பாக இடம்பெறுதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad