• Breaking News

    யாழ். திருநெல்வேலியில் ஆலயத்தினை தரிசிக்க சென்றவர் திடீரென கீழே வீழ்ந்து மரணம்!

     


    இன்று, திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    55 வயதுடைய ஆண் ஒருவர் ஆலயத்தை வழிபட ஆலயத்துக்குள் நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்தால் அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்கினர்.

    அம்புலன்ஸ் வண்டியில் வந்த வைத்தியர், மயங்கி விழுந்த நபரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad