கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறுமி! சந்தேகநபர் சிக்கினார்
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
காதலை நிராகரித்தமையே, இந்த கொலைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையை அடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை