பொருளாதார நெருக்கடியிலிருந்து அர்ஜென்டீனாவை மீட்டெடுக்கும் முயற்சியில் IMF
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் அர்ஜென்டீனாவுக்கு (Argentina) 45 பில்லியன் (billion) டொலர் (dollar) கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அர்ஜென்டீனா (Argentina) செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அர்ஜென்டினா (Argentina) முன்பு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கடனைப் பெற்றிருந்தது, ஆனால் அதன் தவணைகளை செலுத்தத் தவறியதால் அதை மறுசீரமைக்க வேண்டியிருந்தது.
புதிய முறையின் கீழ், 2018 இல் பெறப்பட்ட $ 57 பில்லியன் கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் மூலதனப் பற்றாக்குறை ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயம்தான் அந்நாட்டின் முக்கிய வருமான ஆதாரம். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் IMF ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர்.
இந்தக் கடனைப் பெறுவதற்காக பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை