• Breaking News

    SOND நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழில் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிநெறி

     


    ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம், சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான பயிற்சிநெறியானது நடைபெற்றது.

    SOND நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி நெறியானது  யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் நடைபெற்றது.

    SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோர் செயற்பட்டனர்.

    இப்பயிற்சியில் சமூக  பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளிட்ட 31 பேர் கலந்து கொண்டனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad