போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் 9 பேர் காயம் - ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த மேலும் நால்வர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை