• Breaking News

    தாவடியில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் - மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிப்பு!

     


    சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி தெற்கு, தாவடி முருகன் கோவிலுக்கு அருகாமையில்  வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதுப் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

    03 மோட்டார் சைக்கிள்களில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். அத்துடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

    இச்சம்பவத்தில் 02 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டின் 06 ஜன்னல்கள் சேதமாகியாள்ளன. அத்துடன் இரண்டு கண்ணாடி மேசைகளின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.

     இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad