கைப்பேசி கேம் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்
16 வயதுடைய சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உடுதும்பர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடுதும்பர, ஹாலியால பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் சமையலறையில் கடந்த 5ஆம் திகதி காலை சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய உடுதும்பர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் கையடக்க தொலைப்பேசி விளையாட்டுக்கு அடியாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாய் கண்டித்ததால் சமையலறையின் கூரையில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை