கடும் அச்சத்தில் ஜனாதிபதி கோட்டபாயவின் ஆஸ்தான ஜோதிடர் பாதுகாப்பு கோருகின்றார்!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடரான அநுராதபுரம் ஞானக்கா தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறிய போது தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய பதற்றத்தின் போது ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதியை அழைத்த ஞானக்கா உடனடியாக தற்போது உள்ள பாதுகாப்பை விடவும் அதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.
காளி அம்மனின் சக்தி உள்ளதாக கூறி மக்களை ஏமாற்றும் ஞானக்காகவுக்கு ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதி பாதுபாப்பினை அதிகரிக்க இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் ஞானக்காவின் கோயில் மற்றும் அவரது புதிய ஹோட்டலையும் சுற்றிவளைப்பதற்கு மக்கள் தயாராகி வருவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை வேளையில் ஆரம்பமான ஜனாதிபதிக்கு எதிர்ப்பு போராட்டம் அதிகாலை 4 மணி வரை நீடித்த நிலையில், அது பெரும் வன்மையாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை