சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு முறையில் சீரான பெற்றோல் விநியோகம்
நேற்றையதினம் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு முறையில் சீரான எரிபொருள் விநியோகம் நடைபெற்றது.
ஏற்கனவே பெற்றோலினை பெற்றவர்கள் மீண்டும் பெற்றோலினை பெறாத வகையில் எரிபொருள் அட்டை பரீட்சிக்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டது.
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் இவ்வாறு எரிபொருள் விநியோகம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை