• Breaking News

    மே 09 கலவரம் - 11 பேர் பொலிஸாரால் அதிரடியாக கைது!

     


    கடந்த மே மாதம் 9ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரியவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்களை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

    அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவின் வீட்டை தாக்கிய சந்தேக நபரொருவர், பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீட்டை தாக்கிய நபர் ஒருவர், அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, மாத்தறை பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டிற்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் இருவரும் எலஹெர பிரதேச சபை தவிசாளரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad