• Breaking News

    யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து 100 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

     யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


    குறித்த நிகழ்வு இன்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.


    Humedica நிறுவனத்தினால் சிறுவர் இல்ல அனுமதி கோரி காத்திருப்போர் பட்டியலில் உள்ள சிறுவர்களைச் சார்ந்த 100 குடும்பங்களுக்கே இவ்வாறு தலா 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


    அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், நிறுவன அங்கத்தவர்கள் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad