மனைவியின் தொல்லை தாங்காமல் 100 அடி பனைமரத்தில் குடியேறிய கணவன்..!
உத்தரப் பிரதேச மாநிலம், மவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பர்வேஷ். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், தகராறு முற்றியதன் காரணமாக, வித்தியாசமான முடிவு ஒன்றை ராம் பர்வேஷ் எடுத்துள்ளார்.
மனைவியின் தொல்லை தாங்காததால், அவரிடம் இருந்து பிரிந்து போய் 100 அடி உயரமுள்ள பனை மீரத்தின் ஏறி குடியேறி உள்ளார்.
இயற்கை உபாதை கழிக்க மட்டுமே ராம் பர்வேஷ் கீழே இறங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அவருக்கான உணவு வகைகள் அனைத்தும் கயிறு கட்டி கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை