திருவிழாவில் இரு குழுக்களிடையே மோதல் - 19 வயது இளைஞன் பலி!
ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல் பிரிவிற்குட்டப்பட்ட வாகநேரியில் கடந்த 25 ஆம் திகதி இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த ந.ரமேஸ்காந்தன் வயது (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைகலப்பின்போது காயமுற்ற ஏனைய இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரதேசத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இடம்பெற்று இறுதி நாளாகிய 25 ஆம் திகதி இரவு தேவதிகளிளை மந்திரித்து கட்டுதல் தொடர்பான முரன்பாட்டின் காரணமாக இரு குழுக்களிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை