• Breaking News

    சொக்லட் கொடுத்து 4 வயதுச் சிறுமிக்கு ஆசிரியர் செய்த மோசமான செயல்!

     


    காமராஜ் என்பவர் சேத்பட் அருகே உலகபட்டு கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.


    தனது மனைவி பிரபாவதி நடத்தும் சாந்தா வித்யாலயா பள்ளிக்கு அடிக்கடி காமராஜ் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் 4 வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கபட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.


    இதில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது சிகிச்சையில் தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.


    இதனையொடுத்து 4வயது சிறுமியிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஸ்ரீ சாந்தா வித்யாலயா பள்ளி தலைமையாசிரியை பிரபாவதி கணவர் காமராஜ் என்பவர் 4 வயது குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.


    பின்னர் இச்சம்பவம் குறித்து போளுர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டார்.


    தலைமறைவான அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் என்பவரை திருச்செந்தூர் பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad