• Breaking News

    முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் 95வது பிறந்ததின நிகழ்வு ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)


    மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது 95வது பிறந்ததின நிகழ்வு இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

    இதன்போது வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பிரதேச சபையின் தவிசாளர்கள், விரிவுரையாளர்கள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.









    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad