பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை.
பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு எரிசக்தி அமைச்சு, போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவிதுள்ளது.
கருத்துகள் இல்லை