யாழ். உரும்பிராயில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு!
யாழ். உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் யாழ். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக 26.08 மீட்கப்பட்டிருக்கின்றார்.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டினுள் சென்று பார்த்தபோதே குறித்த ஆசிரியை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும்,
கழுத்து வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன,சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை