வன்னிச் சங்கம் கனடா நிறுவனத்தினால் இலவச கையேடுகள் வழங்கி வைப்பு!
இன்றையதினம் வன்னிச் சங்கம் கனடா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கற்றல் கையேடுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
வன்னிச் சங்கம் கனடா நிறுவனத்தின் பூரண நிதி அனுசரணையில் முல்லைத்தீவு கிளிநொச்சி மன்னார் வவுனியா முதலிய மாவட்டங்களில் உள்ள அடிப்படை வசதிகளற்ற மற்றும் இணையத்தளத்தை பாவித்து கற்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்ற பாடசாலைகளைத் தெரிவு செய்து இவ் இலவசக் கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இந் நிலையில் காகிதாதிகளின் வெகுவான விலை உயர்வால் மாணவர்கள் கடந்த கால வினாத்தாள்களையோ அல்லது பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொள்ள பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகினர்.
ஆகையால் தொடர்ச்சியாக மாணவர்களின் கல்விப்பசிக்கு உணவளிக்கின்ற வன்னிச் சங்கம் கனடா அமைப்பினர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற வழிசமைக்கும் நோக்கில் தமிழ், கணிதம், வரலாறு, விஞ்ஞானம், ஆங்கிலம் முதலிய பிரதான ஐந்து பாடங்களையும் உள்ளடக்கி இக் கையேடானது தயாரிக்கப்பட்டு வன்னிப்பெரு நிலப்பரப்பில் கல்விபயிலுகின்ற 3000 மாணவர்களுக்கு வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை