காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக பாலச்சந்திரன் தெரிவு!
காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கணேச பிள்ளை பாலச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
உள்ளூர் ஆட்சி ஆணையாளரால் சபைக்கான தவிசாளர் தேர்வு இடம்பெற்ற நிலையில் போட்டி இன்றி பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
தவிசாளர் தெரிவில் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 1 உறுப்பினரும் பிரசன்னமாயிருந்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கியதேசியக் கட்சியின் இரு உறுப்பினர்களும் தெரிவு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
கருத்துகள் இல்லை