• Breaking News

    நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் அதிரடியாக கைது!

     


    நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் நேற்றைய தினம்(24) கைது செய்துள்ளனர்.


    இது குறித்து மேலும் தெரியவருவதாவது,


    நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆலயத்துக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் ஆலயத்துக்குள் கடமையிலிருந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


    பக்தர்களிடம் நூதனமாக திருடிய வங்கி அட்டையை பயன்படுத்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை கொள்வனவு செய்த போதே குறித்த நபர் இனங்காணப்பட்டார்.


    இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிசார்  கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்த நிலையில் யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad