சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரச அதிபரின் மகிழ்ச்சி தகவல்!
நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக, குறைந்த வருமானம் பெறும் 61,000 குடும்பங்களுக்கு 4 மாத காலத்திற்கு மாதாந்தம் 10,000 ரூபாவை வழங்க இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் முதியோர் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 5000 ரூபாயில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
நிதியமைச்சர், அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பித்தஇடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இதனை முன்மொழிந்துள்ளார்.
கருத்துகள் இல்லை