வவுனியா – நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!
வவுனியா – நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில், வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில், 24ஆம் நாளான இன்றைய போராட்டத்தில் தமது கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கௌரவமான உரிமைக்கான மக்கள் குரல், மக்கள் குரல் ஓய்ந்திருந்ததே தவிர ஒருகாலமும் ஒடுங்கியிருக்கவில்லை, ஜனநாயக பாதையில் மக்களே மக்களுக்காய்’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை