யாழ். சங்கரத்தையில் மிதிவெடிகள் மீட்பு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட சங்கரத்தைப் பகுதியில் மிதி வெடிகள் நேற்று மீட்கப்பட்டன என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரி வித்துள்ளனர்.
சங்கரத்தை பகுதியில் உள்ள வீடொன் றின் காணியை வீட்டின் உரிமையாளர் நேற்றுக்காலை துப்புரவு செய் துள்ளார். இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இரு பொருள்கள் காணப்பட்டதை அவதானித்தார்.
இதன்பின்னர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை யடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட பொருள்களை அவதா னித்து மிதிவெடிகள் என்பதை இனங் கண்டனர்.
அதன்பின்னர் மிதிவெடிகளை செயலிழக்கச் செய்வதற்கான நட வடிக்கைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை