மானிப்பாயில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு ; வீட்டின் மீதும் தாக்குதல்! (படங்கள் இணைப்பு)
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ. வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.
கருத்துகள் இல்லை